சினிமா

அட.. இது மாஸான கூட்டணியாச்சே! பிரபல மன்மதலீலை இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்! வெளிவந்த தகவல்!!

Summary:

அட.. இது மாஸான கூட்டணியாச்சே! பிரபல மன்மதலீலை இயக்குனருடன் இணையும் சிவகார்த்திகேயன்! வெளிவந்த தகவல்!!

தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தனது தீராத முயற்சியால், கடின உழைப்பால் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். இவரது படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு இருக்கும்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான டான் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் SK20 படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியது. அதற்கு பிறகு சிவகார்த்திகேயன் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்.

பின்னர் ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வெங்கட் பிரபு தற்போது மன்மதலீலை என்ற படத்தை இயக்கியுள்ளார். இதன் கிளிம்ஸ் வீடியோ அண்மையில் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது.


Advertisement