அந்த ஒரு நொடிக்காகதான் வெயிட்டிங்.. உடனே ஓடிருவேன்! செம எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன்! எதற்காக தெரியுமா??

அந்த ஒரு நொடிக்காகதான் வெயிட்டிங்.. உடனே ஓடிருவேன்! செம எதிர்பார்ப்பில் சிவகார்த்திகேயன்! எதற்காக தெரியுமா??


Sivakarchicken open talk about act as son to rajini

தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் மிமிக்ரி ஆர்டிஸ்ட், தொகுப்பாளராக ரசிகர்களை கவர்ந்து வந்த அவர் பின்னர் தனது தீராத முயற்சியால் வெள்ளித்திரையில் ஹீரோவாக அவதாரமெடுத்தார். அதனைத் தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல், ரஜினிமுருகன், ரெமோ என பல வெற்றி படங்களை கொடுத்த அவர் இறுதியாக நெல்சன் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். 

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்துள்ளார். கல்லூரி கதையை மையமாகக் கொண்ட இந்தப் படம் மே 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

sivakarthickeyan

இதற்கிடையில் சிவகார்த்திகேயன் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவிருக்கும் தலைவர் 169 படத்தில் அவருக்கு மகனாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவியது. இதுகுறித்து சிவகார்த்திகேயனிடம் கேட்டபோது அவர், நான் தலைவரின் தீவிர ரசிகர். யாருக்குதான் அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது. நெல்சன் என்னை ரஜினியின் மகனாக நடிக்க அழைத்தால் உடனே ஓடிவிடுவேன். அந்த ஒரு நொடிக்காகதான் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.