சினிமா

ஏன்.. எதற்காக.. நாங்கள் அப்படி என்ன தப்பு பண்ணோம்.! கொரோனாவை பற்றி நகைச்சுவையாக வீடியோ வெளியிட்ட நடிகர் சிவா! வைரலாகும் வீடியோ.

Summary:

Siva told awareness of corona

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் அதிகரித்து வரும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் தங்களது நாட்டு மக்களை காப்பாற்றி கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் இந்தியாவிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி இந்திய பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கூறி ஏப்ரல் 15-ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பல சினிமா பிரபலங்களும் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு வீடியோ மூலம் கூறி வருகின்றனர்.

அதேபோல் நடிகர் சிவா கொரோனா குறித்த நகைச்சுவையான வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் வந்த வேகத்தில் திரும்பிப் போ கொரோனா என்றும், கோ கொரோனா கோ என்றும் தூக்கத்தில் நடிகர் சிவா புலம்புவது போலவும், அவருடைய அம்மா, எழுந்து வீட்டை பெருக்கி, பாத்திரம் கழுவி வை என ஆர்டர் போடும் விதமாக காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement