சினிமா

வாவ்.. 6 வருஷத்திற்கு பிறகு பாடகி ஸ்ரேயா கோஷல் சொன்ன ஹேப்பி நியூஸ்! குவியும் வாழ்த்துக்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ஜூலி கணபதி என்ற படத்தில் எனக்கு பிடித்

தமிழ் சினிமாவில் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த ஜூலி கணபதி என்ற படத்தில் எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே என்ற பாடலை பாடியதன் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா கோஷல். இப்பாடல் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. ஆரம்ப காலத்தில் பாலிவுட் படங்களில் மட்டும் பாடி வந்த அவருக்கு அப்பாடலின் மூலம் ஏராளமான ரசிகர்கள் உருவாகினர்.

அதனைத் தொடர்ந்து ஸ்ரேயா கோஷல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அளவிற்கு தனது இனிமையான குரலால் பல படங்களிலும் ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அவர் பாடிய முன்பே வா என் அன்பே வா என்ற பாடல் தற்போது வரை ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுகின்றது. மேலும் ஸ்ரேயா தனது பாடலுக்காக பல தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

ஸ்ரேயா கோஷல்  கடந்த 2015-ம் ஆண்டு வங்காளத்தை சேர்ந்த ஷிலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார். இந்த மகிழ்ச்சியான செய்தியை அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ஸ்ரேயா கோஷல் பகிர்ந்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


 


Advertisement