பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த மகத்திற்கு இரண்டாவது முறையாக அடி உதை!

பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியே வந்த மகத்திற்கு இரண்டாவது முறையாக அடி உதை!


Singer ramya attacked actor mahath

தமிழில் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி  மிகவும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் சீசன் ஓன்று. இந்த மிர்ச்சி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் சீசன் தொடங்கப்பட்டு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

வாரம் ஒருவராக வெளியேறும் நிலையில் கடந்த வாரம் மஹத் வெளியேற்றப்பட்டார்.
இதில் போட்டியாளராக பங்கேற்றவர்களில் மகத்தும் ஒருவர். இவர் அஜித்துடன் மங்காத்தா,விஜய்யுடன் ஜில்லா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்.

ஆரம்பத்தில் அனைவராலும் கவரப்பட்ட அவர்,கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா உடன் சேர்ந்து பெரும் கலவரங்களை உருவாக்கி வந்தார்.


இந்நிலையில் மஹத் ரசிகர்கள் வைத்த கோரிக்கையின்படி ரெக்கார்ட் வழங்கப்பட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

 இவ்வாறு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மஹத் முதல் வேலையாக தன்னுடைய நெருங்கிய நண்பரான சிம்புவை சந்தித்தார்.

அப்பொழுது சிம்பு மஹத்தை பளார் பளாரென கன்னத்தில் செல்லமாக அறைந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஏற்கெனவே வெளியேறிய ரம்யா, வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு கட்டையை வைத்துக்கொண்டு, ‘என்னடா செஞ்சே, உள்ளே என்னடா செஞ்சே...’ என்று ரம்யா செல்லமாக அடிக்கிறார். அதற்கு பயந்து ஐயோ அம்மா என்று அலறும் மஹத், ‘மிஸ்யூ மும்தாஜ் மிஸ் யூ மும்தாஜ்’ என்று கத்துகிறார் .
பிறகு மீண்டும் ரம்யா அடிக்க, ‘பிக்பாஸ்... பிஸிக்கல் வயலன்ஸ் பிக்பாஸ்’ என்று கத்துகிறார்.