பாடகி ரம்யாவுக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா? - TamilSpark
TamilSpark Logo
சினிமா

பாடகி ரம்யாவுக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?

தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகராக இருந்த என்எஸ் கலைவாணரின் பேத்தி பாடகி ரம்யா. சங்கீதத்தின் மீது மிகுந்தஆர்வம் கொண்ட இவர் தனது சிறு வயது முதலே கர்னாடிக் முறைபடி பாடல் கற்று வந்தார். மேலும் கர்னாடிக் முதல் குத்து பாடல் வரை அவர் தமிழ், தெலுங்கு , மலையாளம் என பல மொழி திரைப்படங்களிலும் ஏராளமான பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.

இவ்வாறு பாடகியாக முன்னணியில் இருந்த இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். மேலும் சிறப்பான விளையாட்டாலும், தனது குணத்தாலும் அவர் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது காதலரை கரம் பிடித்தார். இந்நிலையில் தற்போது அவருக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளதாம். இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo