சினிமா

மெல்லிய குரலால் ரசிகர்களை கட்டியிழுத்த 96 பட பாடகி காலமானார்! திரைப்பிரபலங்கள் இரங்கல்!!

Summary:

பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்

பிரபல பின்னணிப் பாடகி கல்யாணி மேனன் வயது முதிர்வின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். 

தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான ஹிட் பாடல்களை பாடி பிரபல பாடகியாக வலம் வந்தவர் கல்யாணி மேனன். இவர் தமிழ் சினிமாவில் நல்லதொரு குடும்பம் என்ற படத்தில்  செவ்வானமே பொன் மேகமே என்ற பாடலை பாடியதன் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் அவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.

அவர் புதிய மன்னர்கள் படத்தில் 'வாடி சாத்துக்குடி', காதலன் படத்தில் இந்திரையோ இவள் சுந்தரியோ, முத்து படத்தில் இடம்பெற்ற 'குலுவாலிலே' போன்ற பாடல்களை பாடியுள்ளார். மேலும் அவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் 'ஓமணப் பெண்ணே' மற்றும் 96 படத்தில் 'காதலே காதலே' போன்ற ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.

வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு திரையுலக பிரபலங்கள், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் பாடகி கல்யாணி மேனனின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது.


Advertisement