சினிமா

பிரபல நடிகையாக இருந்து, பாடகியாக அவதாரம் எடுக்கும் கொடி பட நடிகை! 

Summary:

singer-is-dhanush-movie-actress-anu

நடிகை அனுபமா பரமேஸ்வரன்,மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தின் மூலம் பிரபலமானவர். இவர் தமிழில் ‘கொடி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளத்தை அடுத்து தற்போது தெலுங்கிலும் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழில் கவர்ச்சிக்கு நோ அவர் தற்போது தெலுங்கில் ஓரளவு கவர்ச்சி காட்டி வருகிறார்.

இந்நிலையில் நடிகையாக வலம் வந்த அவர், இனி பாடகியாகவும் அவதாரம் எடுக்கவுள்ளார். அனுபமாவுக்கு சினிமாவில் பின்னணி பாடல்களை பாட ஆசை ஏற்பட்டுள்ளதாம். இந்த தகவலை அவர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

சினிமா உலகில் பிரபல நடிகைகளான ஸ்ருதிஹாசன், ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் உள்ளிட்ட நடிகைகள் பின்னணி பாடகராக உள்ள நிலையில் தற்போது நடிகை அனுபமாவும் இந்த பாடகி பட்டியலில் இணையவுள்ளார்.


Advertisement