தமிழகம் சினிமா

நன்றி கூற வார்த்தைகள் போதாது! எஸ்.பி.பி மறைவால் துயரத்தில் மூழ்கிய பாடகி சித்ரா!

Summary:

Singer chitra tweet about spb

பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியன் அவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 5ம் தேதி சென்னையில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம்  உயிரிழந்தார். இவரது இந்த மரணம் அனைவரையும் சோகத்திற்குள்ளாகியுள்ளது. மேலும் பலரும் கண்ணீருடன் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அவருடன் பல மேடைகளில், படங்களில் ஒன்றாக இணைந்து ஏராளமான பாடல்களை பாடிய பாடகி சித்ரா அவர்கள் எஸ்பிபி மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ஒரு சகாப்தம் முடிந்தது, இசை இனி பழைய நிலைக்கு திரும்பாது.உலகமும் பழையபடி இருப்பது கடினம். ஒரு சிறந்த பாடகியாக்க நீங்கள் என்னை வழிநடத்தியதற்கு நன்றி கூற வார்த்தைகள் போதாது. சாவித்திரியம்மாவுக்கும், சரணுக்கும், பல்லவிக்கும், குடும்பத்தினருக்கும் என்  ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.  


Advertisement