சினிமா

கமல் முன்பே கதறியழுத பாடகி சின்னப்பொண்ணு! ஏன்? இதுதான் காரணமா? வைரலாகும் வீடியோ!!

Summary:

கமல் முன்பே கதறியழுத பாடகி சின்னப்பொண்ணு! ஏன்? இதுதான் காரணமா? வைரலாகும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. இந்த சீசனில் இசைவாணி, நடிகர் ராஜு, மதுமிதா, யூடியூப் விமர்சகர் அபிஷேக், தொகுப்பாளினி பிரியங்கா, அபினய், நடிகை பவானி ரெட்டி, நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, நாடியா சாங், வருண், காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி, ஸ்ருதி, அக்ஷரா, ஐக்கி பெர்ரி, நாடகக் கலைஞர் தாமரைச்செல்வி, சிபி, நிரூப், நமிதா மாரிமுத்து ஆகியோர் போட்டியாளராக களமிறங்கினர்.

நிகழ்ச்சி தொடங்கிய ஓரிரு நாட்களிலேயே திருநங்கையான நமிதா ஒரு சில காரணங்களால் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவதற்கான நாமினேஷன் நடைபெற்றது. நடிகை பாவனி மற்றும் தலைவராக இருந்த தாமரையை தவிர மற்ற 15 போட்டியாளர்களும் நாமினேட் ஆனர்.

இந்நிலையில் இன்று வெளியான ப்ரோமோவில், காணாமல் போனவர்கள் என சின்னப் பொண்ணு மற்றும் நாடியா சாங்கின் பெயரை அபிஷேக் கூறியுள்ளார். இதனைக் கேட்டதும் கமல் முன்பே சின்னப்பொண்ணு கதறி  அழுதுள்ளார். மேலும் சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


Advertisement