தமிழகம் சினிமா

நடிகர் ராதாரவி பற்றிய உண்மையை ஆதாரத்துடன் வெளியிட்ட பாடகி சின்மயி!

Summary:

Singer chinmaiye complaints against to vairamuthu

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக பாலியல் குற்றம் சாற்றி தமிழ் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் பாடகி சின்மயி. இதன் பின் சில நாட்களில் அவர் டப்பிங் யூனியலிருந்து நீக்கப்பட்டார். இது சின்மயிக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சந்தா பணம் செலுத்தவில்லை என அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

டப்பிங் சங்கத்தில் தலைவராக இருப்பவர் நடிகர் ராதா ரவி. தற்போது நடிகர் ராதாரவி மீது சர்ச்சை கருத்தை கூறியுள்ளார் பாடகி சின்மயி. அதாவது  ராதாரவிக்கு  டத்தோ பட்டம் வழங்கப்பட்டது சம்மந்தமான ஆதாரத்தை வெளியிட்டுள்ளார்.

அதாவது ராதா ரவிக்கு வழங்கப்பட்டம் பொய்யானது. மலேசியா நாட்டின் மெலோகா மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை கொண்டு அவர் ராதா ரவிக்கு அந்த அரசு அப்பட்டத்தை வழங்கியதாக ஆவணத்தில் இல்லை. இந்தியாவில் நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே இப்பட்டம் வழங்கப்பட்டுள்ளதாக தெரியப்படுத்தியுள்ளார்.

 


Advertisement