பிரபல பாடகி சின்மயின் குழந்தைகளை பார்த்துள்ளீர்களா... வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்... குவியும் லைக்ஸ்கள்!!



Singer chinmai childrens latest photo goes viral

தமிழ் சினிமாவில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடி தமிழ் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானவர் சின்மயி. அதனை தொடர்ந்து டி.இமான், தேவா, ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஜிவி பிரகாஷ் என முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் ஏராளமான பாடலை பாடி இன்று முன்னணி பாடகிகளுள் ஒருவராக இருந்து வருகிறார்.

சின்மயி ஒரு சிறந்த பாடகியாக மட்டுமின்றி சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் இருந்து வருகிறார். பிரபல நடிகைகளான சமந்தா, காஜல் அகர்வால், தமன்னா, த்ரிஷா என பல நடிகைகளுக்கு சின்மயி குரல் கொடுத்திருக்கிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டு கழித்து அழகிய இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்நிலையில் தற்போது ராகுல் தனது குழந்தைகளின் லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருவதுடன் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Singer chinmai