பிரபல பழம்பெரும் பின்னணி பாடகர் காலமானார்! திரைபிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்!

பிரபல பழம்பெரும் பின்னணி பாடகர் காலமானார்! திரைபிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்!



singer-al-ragavanan-passed-away

தமிழ் திரையுலகில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி பழம்பெரும் பின்னணி பாடகராக இருந்தவர் ஏ.எல். ராகவன்.  87 வயது நிறைந்த இவருக்கு இன்று காலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து ராமசந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மனைவி பிரபல குணச்சித்திர நடிகை எம்.என். ராஜம்.

பாடகர் ஏ.எல். ராகவன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். அவரது குரலுக்கென தமிழ்நாட்டில் ஏராளமாக ரசிகர்கள் உள்ளனர். 
பார்த்தால் பசி தீரும் படத்தில் அவர் பாடிய 'அன்று ஊமை பெண்ணல்லோ', நெஞ்சில் ஓர் ஆலயம்  படத்தில் பாடிய 'எங்கிருந்தாலும் வாழ்க' போன்ற பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானது. மேலும் இவர் ஆரம்பத்தில் பெண்குரலில்  ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார்.

heart attack

இந்தப் பாடல்கள் மட்டுமின்றி எக்கச்சக்கமான ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களை தன் வசம் கட்டிப்போட்ட பின்னணி பாடகர் ஏ.எல் ராகவன் மாரடைப்பால் இன்று மரணமடைந்த செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல பிரபலங்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.