சினிமா

பின்னணி பாடகரும், பிக்பாஸ் போட்டியாளருமான ஆஜித்கு அறிகுறி இல்லாமலே கொரோனா பாதிப்பு! அதிர்ச்சியில் ரசிகர்கள்...

Summary:

பின்னணி பாடகரும், பிக்பாஸ் 4 நிகழ்ச்சில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்

பின்னணி பாடகரும், பிக்பாஸ் 4 நிகழ்ச்சில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ஆஜித் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளது கண்டரியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் ஆம் அலை தற்போது மிகத்தீவிரமாக பரவி வருவதால், தினசரி கொரோனா பாதிப்பு மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 28,978 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாகவும், சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணி நேரத்தில் 232 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பின்னணி பாடகரும், பிரபல விஜய் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் 16 போட்டியாளருமான ஒருவருமான ஆஜித் காலிக் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்ஸ்ராக்கிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த வார தொடக்கத்தில் கோவிட்டுக்கு எந்த அறிகுறிகளும் இல்லாமல் நான் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். பிரார்த்தனைகளால் என் உடல்நலம் நன்றாக இருக்கிறது. தயவுசெய்து நீங்கள் அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றவும். உங்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் பாதுகாப்பாக இருங்கள். இந்த உலகம் விரைவில் இயல்பு நிலைக்கு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.


Advertisement