வயது 43.! 21 வருடம் கழித்தும் அதே நடனம்..! அதே அழகு..! வைரலாகும் சிம்ரனின் புது வீடியோ..!
வயது 43.! 21 வருடம் கழித்தும் அதே நடனம்..! அதே அழகு..! வைரலாகும் சிம்ரனின் புது வீடியோ..!

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை சிம்ரன். கமல், விஜயகாந்த், விஜய், அஜித் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் பிஸியானார் சிம்ரன்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்த சிம்ரன் தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா படத்தில் வில்லியாக ரீஎண்ட்ரி கொடுத்த அவர் பின்னர் ரஜினியின் பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் இவர் சமூக வலைத்தளங்களில் பயங்கர ஆக்டிவாக உள்ளார். இந்நிலையில், அஜித் - சிம்ரன் நடித்து 1999 ஆம் ஆண்டு வெளியான வாலி படத்தின் ஏப்ரல் மாதத்தில் பாடலுக்கு டிக் டாக்கில் நடனம் ஆடியுள்ளார். இத்தனை வருடம் ஆகியும், அதே நளினம், அதே நடனம் என சிம்ரன் கலக்கிவருவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.
Never too late to dance! 💃#wednesday #wednesdaymotivation #wednesdayvibes #morningvibes #Tiktok #dance #dancevideo #slimfitsimran #simran #simrandance pic.twitter.com/m0l2IMuOL7
— Simran (@SimranbaggaOffc) March 4, 2020