ஐயயோ! சிம்ரனுக்கு என்னாச்சு? அவரே வெளியிட்ட ஒத்த புகைப்படத்தால் பதறி துடிதுடித்துப்போன ரசிகர்கள்!

simran post shootingspot images


simran post shootingspot images

தமிழ் சினிமாவில் பிரபுதேவா நடிப்பில் வெளிவந்த VIP திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சிம்ரன் அதனைத் தொடர்ந்து அவர் ஒன்ஸ்மோர், நேருக்குநேர், அவள் வருவாளா, நட்புக்காக துள்ளாதமனமும்துள்ளும்,  கன்னத்தில் முத்தமிட்டால் என தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

இவர் விஜய், அஜித், கமல், ரஜினி, சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இளைஞர்களின் கனவுக் கன்னியான சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த சிம்ரன் மீண்டும் தற்போது படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார்.

simran

 அதைத் தொடர்ந்து சமீபத்தில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது நடிப்பில் வெளிவரவிருக்கும்  படத்தின்  படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை  வெளியிட்டுள்ளார். அதில் நெற்றியில் காலில் ரத்த காயத்துடன் காணப்பட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் சிம்ரனுக்கு அடிபட்டு விட்டதோ என பதறிப் போயினர். அதன்பிறகு இது படத்திற்காக எடுத்த புகைப்படம் என தெரியவந்த நிலையில் நிம்மதி அடைந்தனர். 

simran