சினிமா

விஜய்யுடன் மல்லுக்கட்டும் சிம்பு.. மாஸ்டருக்கு போட்டியாக ஈஸ்வரன் படத்தின் டீசர் வெளியிடும் நேரத்தை பாருங்கள்

Summary:

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் டீசர் தீபாவளி அன்று காலை 04:32 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் டீசர் தீபாவளி அன்று காலை 04:32 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். சமீபத்தில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு அதற்குள் முடிவடைந்துள்ளநிலையில் படத்தின் டீசர் தீபாவளி தினமான நாளை காலை 04:32 மணிக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வெளியாக உள்ளது.

ஒரு படத்தின் டீசர் அதிகாலையில் வெளியாவது இதுவே முதல் முறை எனவும் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. அதேபோல் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனால் ஈஸ்வரன் மற்றும் மாஸ்டர் படத்தின் டீசர்கள் ஒரே நாளில் வெளியாகும் நிலையில் தளபதி மற்றும் சிம்புவின் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Advertisement