ஏறி போன உடல்..! நெருங்கும் படப்பிடிப்பு..! தீவிர உடற்பயிற்சி செய்யும் சிம்பு..! வைரல் வீடியோ..!

ஏறி போன உடல்..! நெருங்கும் படப்பிடிப்பு..! தீவிர உடற்பயிற்சி செய்யும் சிம்பு..! வைரல் வீடியோ..!


Simbu workout video goes viral

வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க உள்ளார் சிம்பு. படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் சிம்பு - படக்குழு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படம் தொடங்கும் முன்பே தடைபட்டது. பின்னர் இருவரும் சமாதானம் ஆனதை அடுத்து படம் மீண்டும் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மாநாடு படத்தில் சிம்பு நாயகனாக நடிக்க, கல்யாணி ப்ரியதர்சன் கதாநாயகியாக நடிகிக்கின்றார். மேலும்  இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

simbu

மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனாக நடிக்க உள்ளதாகவும், நல்ல பெயரை அவருக்கு தேர்வு செய்து தருமாறும் அண்மையில் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சமீப காலமாக உடல் எடை கூடை மிகவும் சிரமப்பட்டு வரும் சிம்பு தற்போது தீவிர உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார்.

இந்நிலையில், மாநாடு படத்திற்காக சிம்பு மேற்கொண்டு வரும் உடற்பயிற்சி வீடியோவை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை சிம்புவின் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.