சினிமா

சிம்புவின் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி! சிம்புவின் குரலில் நாளை வெளியாகிறது "டேய் மாமே"..

Summary:

Simbu song dei mame releases tomorrow

பிக்பாஸ் புகழ் மகத் மற்றும் யாசிகா ஆனந்த் இருவரும் இணைந்து நடித்துள்ள படம் இவன் தான் உத்தமன். இந்த படத்தினை மகேஷ் மற்றும் வெங்கட் இயக்கியுள்ளனர். 

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தினை பரதன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியது. 

தமன் இசையமைக்கும் இந்த படத்தில் மகத்தின் நெருங்கிய நணபரான சிம்பு "டேய் மாமே.. " என்ற பாடலை பாடியுள்ளார். இந்த பாடல் நாளை பிப்ரவரி 3 ஆம் தேதி மாலை 5:55 மணிக்கு இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிடவுள்ளார். 


Advertisement