வாவ்..! யாருப்பா இந்த பொண்ணு..! ஈஸ்வரன் பட புகைப்படத்தை பகிர்ந்த சிம்பு...

வாவ்..! யாருப்பா இந்த பொண்ணு..! ஈஸ்வரன் பட புகைப்படத்தை பகிர்ந்த சிம்பு...


simbu-shared-eswaran-movie-actress-photo

ஈஸ்வரன் படடப்பிடிப்பின் போது படத்தின் நாயகியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் சிம்பு.

தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுக்கு பெயர் போன நடிகர்களில் ஒருவர் சிம்பு. குறிப்பாக சிம்பு நடிக்கும் படங்களில் அவர் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு செல்வது இல்லை என்று பரவலாக ஒரு புகார் உள்ளது. அந்த புகாரை தட்டி தூக்கும் வகையில் ஈஸ்வரன் படத்தில் ஒரு மாதத்திற்குள் நடித்து முடித்துவிட்டார் சிம்பு.

தற்போது வெங்கட் பிரபு இயக்கிவரும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் சிம்பு பங்கேற்றுவருகிறார். இப்படியே போனால் சிம்பு வருடத்திற்கு 6 படங்கள் நடித்தாலும் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை என்கின்றனர் ரசிகர்கள்.

simbu

இந்நிலையில் நீண்டகாலமாக சமூகவலைத்தளங்களில் இருந்து விலகி இருந்த சிம்பு தற்போது மீண்டும் சமூகவலைத்தள பக்கம் தலைகாட்ட தொடங்கியுள்ளார். அதுமட்டும் இல்லாமல் தான் நடித்துவரும் படங்கள் குறித்த அப்டேட்டுகளையும் ரசிகர்களுடன் பகிர்ந்துவருகிறார்.

இந்நிலையில் ஈஸ்வரன் பட்டபிடிப்பின் போது படத்தின் நாயகியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், யாருப்பா இந்த பொண்ணு என கமெண்ட் செய்துவருகின்றனர்.

View this post on Instagram

ESWARAN 🔥

A post shared by STR (@str.offcial) on