சினிமா

என்ன கொடுமைடா! சிம்புவின் புகைப்படத்தை வெளியிட்டதால் மஹத்துக்கு வந்த சோதனை!

Summary:

Simbu magath

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல வெற்றி படங்களை கொடுத்து மாஸ் காட்டி வருபவர் நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன். நடனம், இசை, நடிப்பு என பன்முகத்திறமை கொண்ட அவர் சரியான வாய்ப்புகள் கிடைக்காமல் சிறிது காலம் நடிப்பிற்கு இடைவெளி விட்ட நிலையில் மீண்டும் செக்க சிவந்த வானம் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் வந்தா ராஜாவாதான் வருவேன்  என்ற படத்திலும் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அவர் சரியாக படப்பிடிப்புக்கு வராததால் இயக்குனர்கள் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருந்து வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு அவர்கள் சபரி மலைக்கு மாலை போட்டுள்ளார். இதனை அவரது நண்பரான மஹத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் மஹத்தையும், சிம்புவையும் செம்மயா வெச்சு செய்துள்ளனர். 


அதாவது ஒரு புகைப்படம் பதிவிட்டது ஒரு குத்தம்மா என்ற அளவுக்கு ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 


Advertisement