சினிமா

6 வருஷத்தில் எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே! சிம்புவின் புகைப்படத்தைக் கண்டு ஃபீல் பண்ணும் ரசிகர்கள்!!

Summary:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவி

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பெருமளவில் பரிச்சயமானவர் நடிகர் சிம்பு. அதனைத் தொடர்ந்து ஹீரோவாக அவதாரம் எடுத்த அவர் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்தார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நன்கு உடல் எடை அதிகரித்தார்.

மேலும் அவருக்கு படவாய்ப்புகளும் குறையத் தொடங்கியது. அதனைoத் தொடர்ந்து சிம்பு அமெரிக்காவிற்கு சென்று கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தனது உடல் எடையை நன்கு குறைத்துள்ளார். பின்னர் மீண்டும் செம ஸ்மார்ட்டாக என்ட்ரி கொடுத்த அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் தேடி வருகிறது. சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் என்ற படத்தில் நடிக்கிறார்.


இதற்கிடையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் சிம்பு தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில் அவர் தற்போது சிவபெருமானை வழிபடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்தபோது சிம்பு அதே சிவன் கோவில் முன்பு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஆறு வருஷத்தில் என்னவொரு மாற்றம் என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.  மேலும் சிலர் இப்படி உடல் எடை குறைந்துவிட்டீர்களே என வருத்தப்பட்டுள்ளனர்.


Advertisement