பூஜையுடன் இனிதே துவங்கிய சூர்யா 46 படம்.! ஹீரோயின் இந்த நடிகையா.! வைரல் புகைப்படங்கள்!!
தலைவா.. தியேட்டர் வாசலில் பிரபல காமெடி நடிகருக்கு அபிஷேகம் செய்த சிம்பு ரசிகர்கள்!! வைரலாகும் வீடியோ!!

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா ஆகிய படத்தின் வெற்றிகளுக்குப் பிறகு இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து உருவான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. படத்தை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில காலங்களாக வெந்து தணிந்தது காடு படத்திற்காக குரல் கொடுத்துவரும் சிம்புவின் நண்பரும், காமெடி நடிகருமான கூல் சுரேஷ் படம் பார்க்க திரையரங்கிற்கு வந்துள்ளார்.
அவரைக் கண்டதும் சிம்பு ரசிகர்கள் தலைவா தலைவா என கத்திக் கொண்டே அவரது காரை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் ரசிகர் ஒருவர் காரின் மீது ஏறி அமர்ந்ததில் கார் கண்ணாடி உடைந்தது. ஆனாலும் வெறியோடு படம் பார்க்க சென்ற கூல் சுரேஷ் வெளியே வந்தபோது சிம்பு ரசிகர்கள் அவருக்கு மாலை அணிவித்து தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்துள்ளனர். பின்னர் வெந்து தணிந்தது காடு. நம்ம தலைவர் STR க்கு வணக்கத்தை போடு என அனைவரும் ஒன்றாக கத்தியுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#VendhuThanindhathuKaadu - #CoolSuresh Paravasa Nilai Mode 🙏
— VCD (@VCDtweets) September 15, 2022
Yetho Yetho Kavasaaki, Atho Atho Mitshubishi...Sowbaakkyaa.. 💥🙏 #SilambarasanTR #VTK #VTKREVIEWpic.twitter.com/OoLRkmZi0X