சினிமா

இது எப்போ கண்டுபிடிங்க! மீண்டும் இணையத்தை தெறிக்கவிட்ட நடிகர் சிம்பு! குவியும் லைக்குகள்!!

Summary:

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்களை க

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தனது சுட்டித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் சிம்பு.  பின்னர் ஹீரோவாக களறங்கிய அவர் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம்வந்தார். சிம்பு சமீபத்தில் சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். இப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியானது.

பின்னர் அவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.  மேலும் சிம்பு ஜில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்திலும், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் சிம்பு அவ்வப்போது  புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அவை ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் ட்ரெண்டாகும். இந்த நிலையில் சிம்பு நேற்று தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அதில் இது எந்த வருடம் கண்டுபிடியுங்கள் எனவும் கேள்வி கேட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த புகைப்படம் பதிவிட்ட 10 நிமிடங்களிலேயே 15,000 லைக்குகளை பெற்றுள்ளது.


Advertisement