பெரிய படத்தில் இருந்து சிம்புவை அதிரடியாக நீக்கிய தயாரிப்பாளர்- ரசிகர்கள் ஷாக்!Simbu - manadu

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர். சினிமாவில் ஒருபக்கம் புகழ் அதிகரித்தாலும், இவர் மீதான சர்ச்சைகளும் மறுபுறம் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது.

மேலும், பல்வேறு நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கினார் சிம்பு. இந்நிலையில் சமீபத்தில் வெளியான 'வந்தா ராஜாவாகத்தான் வருவேன்' படத்திற்கு பிறகு மாநாடு என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

simbu

இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார், வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், எடிட்டராக பிரவீன் கே.எல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்தன.

ஆனால் தற்போது நடிகர் சிம்புவை தயாரிப்பாளர் சுந்தர் காமாட்சி அவர்கள் அதிகாரபூர்வமாக நீக்கியுள்ளார்.இதைக்கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.