சினிமா

புரிஞ்சுக்கோங்க!! நயன்தாராவிற்காக பிரபல நடிகருடன் முட்டி மோதும் விக்னேஷ் சிவன்.!

Summary:

siddharth, vignesh sivan arguement about nayanthara

கொலையுதிர்காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ராதாரவி நயன்தாராவை இழிவாக பேசியதால் பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்நிலையில் பல திரை பிரபலங்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து நடிகர் சித்தார்த் மறைமுகமாக நயன்தாராவை தாக்குமாறு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் மீ டூ விவகாரம் குறித்து எனது சகோதரத்துவம் வாய்ந்த திரைத்துறையினர் சிலர் குரல் எழுப்பாமல் மௌனம் காத்தது எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும்  கோபம் மிகுந்த சக்திவாய்ந்த பெண்ணால் மட்டுமே எந்த பிரச்சினையும் தட்டி எழுப்ப முடியும் என்பதை அமைதியாக நான் கற்றேன். ஆனால் நீங்கள் பாதித்தால் மட்டுமே இது குறித்து பேசினீர்கள் என்றால் இது தைரியமான ஒரு செயல் கிடையாது என நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். 

 இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பதிவு  ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் சமூக வலைதளங்களில் மௌனம் காத்தால் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கவில்லை என்பது அர்த்தம் கிடையாது.

நடிகை நயன்தாரா எப்பொழுதுமே பெண்களின் பாதுகாப்புக்கும், நலனுக்கும் துணையாக நிற்க கூடியவர். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் எதையும் வெளியுலகில் காட்டிக் கொள்வதில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென பதிவிட்டுள்ளார் 


Advertisement