தனுஷ் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்!? 12 ஆண்டுகளுக்கு பிறகு வந்த இன்பசெய்தி.!!
அட.. இவருமா!! வலிமை பட ஹீரோயினிடமே அப்டேட் கேட்ட பிரபல டாப் நடிகர்! யாருனு பார்த்தீர்களா!!
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் தல அஜித்தின் 60வது படமான வலிமை உருவாகி வருகிறது. இப்படத்தை ஹெச். வினோத் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் அஜித் ஆக்சன் கலந்த காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.
வலிமை படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். அவர்கள் தொடர்ந்து இதுகுறித்து கேட்டுவந்த நிலையில், வலிமை பட ஃபர்ஸ்ட் லுக் மற்றும் விளம்பரங்கள் மே 1 அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
இருப்பினும் சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து அப்டேட் கேட்டவண்ணம்தான் உள்ளனர்.
இந்நிலையில் பிரபல நடிகரான சித்தார்த் வலிமை பட கதாநாயகி ஹீமா குரேஷியிடம் வலிமை அப்டேட் கேட்டுள்ளார். அதற்கு அவர் படக்குழுவிடம் தான் கேட்க வேண்டும் என பதிலளித்துள்ளார்.