அவரு இல்லாம எப்படி?? ரோஜா சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்! இதுதான் காரணமா?? ஷாக்கில் ரசிகர்கள்!!



sibbu-suryan-releave-from-roja-serial

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த தொடர் ரோஜா. இந்த தொடரில் ஹீரோவாக அர்ஜுன் கதாபாத்திரத்தில் சிப்பு சூர்யன், மற்றும் ஹீரோயின் ரோஜாவாக பிரியங்கா நல்காரி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இந்த தொடரில் இருந்து ஹீரோ சிப்பு சூரியன் விலகபோவதாக அறிவித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், நான் ரோஜா சீரியலில் இருந்து விலகுகின்றேன், வரும் ஆகஸ்ட் வரை மட்டுமே நடிக்கவுள்ளேன். அதிகம் யோசித்து, ப்ரொடக்ஷன் டீம் அனுமதியுடன் நான் மற்றொரு பயணத்தை தொடங்குகிறேன். குட் பை சொல்வது அவ்வளவு சுலபமல்ல, ஆனால் சில நேரங்களில் அவ்வாறு சொல்வது மிக அவசியமான ஒன்றாகிறது.

அர்ஜுன் கதாபாத்திரம் எனக்கு எப்போதும் ஸ்பெஷல். என்  இதயத்திற்கு நெருக்கமானது. உங்களது தொடர் ஆதரவு மற்றும் அன்பிற்கு நன்றி. புது ப்ராஜெக்ட்டுகளில் உங்களை நான் மகிழ்விக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.  இந்த பதிவு வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.