சினிமா

கண்டிப்பா நடக்கும்.. நான் ரெடி! நடிகை ஸ்ருதிஹாசனுக்கு யாரோட படத்தில் நடிக்க ஆசை பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரபல ம

தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரபல முன்னணி நடிகர் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். அதனைத் தொடர்ந்து அவர் விஜய், அஜித், தனுஷ், சூர்யா, விஷால் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் இந்த ஆண்டு கிராக், வக்கீல் சாப் போன்ற படங்கள்  வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் ஸ்ருதி தமிழில் விஜய்சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். பின்னர் பிரபாஸுடன் சலார் என்ற படத்தில் நடிக்க உள்ளார்   .

   

இந்நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த நடிகை ஸ்ருதிஹாசன், லாபம் படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. இயக்குனர் ஜனநாதனிடம் கம்யூனிசத்தை பற்றி கற்றுக்கொண்டேன். எனது தங்கை அக்ஷராவிற்கு படம் இயக்குவதில் மிகுந்த ஆர்வம். எனக்கு ஏற்ற கதை கொண்டு படம் இயக்கினால் நான் கண்டிப்பா நடிப்பேன். அப்பா தயாரிப்பில் உருவாகும் விக்ரம் படத்தில் நடிக்க எந்த அழைப்பும் இதுவரை எனக்கு வரவில்லை என கூறியுள்ளார்.


Advertisement