என்னது.. ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்காரா நடிகை ஸ்ருதிஹாசன்! என்னாச்சு? அவரே அளித்த விளக்கம்!!



shruthihaasan-heqlth-is-good

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் பிஸியாக இருக்கிறார் இந்த நிலையில் ஸ்ருதி அண்மையில், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படக்கூடிய கர்ப்பப்பை நீர்கட்டி பிரச்சினைக்கு  உள்ளாகி இருப்பதாக கூறியிருந்தார்.

மேலும் உடற்பயிற்சி மற்றும் சரியான உணவு முறையால் அதனை சரி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் உடற்பயிற்சி செய்யும் வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக, ஸ்ருதியின் உடல்நிலை மோசமடைந்து, அபாய கட்டத்தில் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் பரவி வந்தது.

Sruthi haasan

இந்த நிலையில் தற்போது ஸ்ருதி வெளியிட்டுள்ள வீடியோவில், நான் ஹைதராபாத்தில் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன். கடந்த சில நாட்களாக, எனது உடல்நிலை குறித்தும், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் தவறான தகவல்கள் பரவி வருகிறது. அப்படியெல்லாம் எதுவுமில்லை. இது பரவலாக பெண்களுக்கு ஏற்படுகிற பிரச்சினைதான். நான் தற்போது நலமாக உள்ளேன். பெரியளவில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை என அவர் கூறியுள்ளார்.