சினிமா

என்னது! பிரபல இயக்குனரின் படத்தில், நடிகர் சிம்புக்கு ஜோடியாகவிருப்பது இந்த நடிகையா? வெளியான புதிய மாஸ் தகவல்!

Summary:

Shruthi is pair to simbu in miskin movie

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஏராளமான திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சிம்பு . இவர் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. 

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும்படி வெற்றிபெறவில்லை. மேலும் படவாய்ப்புகளும் குறைய தொடங்கியது. இந்த நிலையிலேயே அவருக்கு செக்கச் சிவந்த வானம் திரைப்படம் மீண்டும் கைகொடுத்தது. அதனைத் தொடர்ந்து அவருக்கு ஓரளவிற்கு பட வாய்ப்புகள் வரத் துவங்கியுள்ளது. இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக அப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மாநாடு திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் சிம்பு மிஷ்கின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.  மேலும் அந்த திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது சிம்புவுக்கு ஜோடியாக பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்கவிருப்பதாக புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்நிலையில் அதற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். நடிகை ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த லாபம் படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement