அடக்கொடுமையே! இதெல்லாம் ஒரு சவாலா? ஆதங்கத்துடன் பொங்கியெழுந்த நடிகை ஸ்ருதி ஹாசன்! எதனால் தெரியுமா?

அடக்கொடுமையே! இதெல்லாம் ஒரு சவாலா? ஆதங்கத்துடன் பொங்கியெழுந்த நடிகை ஸ்ருதி ஹாசன்! எதனால் தெரியுமா?


shruthi-hassan-talk-about-vessels-washing-challenge

தமிழ் சினிமாவில் நடிகை, பாடகர் என பன்முகத் திறமையை கொண்டு விளங்குபவர்  நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் கமலின் மகளாவார். அவர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் லாக்டவுன் அனுபவம் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது அவர், இந்த ஊரடங்கில் நானே என்னை நேசிக்க கத்துக்கிட்டேன்.  பிரெண்டஸை சந்திக்கணும், யாரிடமாவது பேசிக்கிட்டு  இருக்கணும் இப்படி ஏகப்பட்ட அழுத்தங்கள் இருக்கு.

பல வருடங்களாக நான் தனியாக வாழ்ந்து பழகியுள்ளேன். சென்னை வந்தால் எனது அப்பாவை சந்திப்பேன். ஆனாலும் தனியாகதான் இருப்பேன். தனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். வீட்டில் சமையல் செய்வது, வீட்டைச் சுத்தம் செய்வது,  துணி துவைப்பது என எல்லா வேலைகளையும் நான்தான் செய்வேன். 

வீடு சுத்தமா இல்லையென்றால் எனக்கு மூளை வேலையே செய்யாது. லாக்டவுன் ஆரம்பித்தபோது நிறைய பேர் என்னிடம் பாத்திரம் கழுவற சவாலில் இணைய சொல்லி வற்புறுத்தினாங்க. பாத்திரம் கழுவறதும் வீட்டை சுத்தம் செய்வதெல்லாம் ஒரு சவால் கிடையாது. வீட்டை சுத்தமாக வைப்பது உங்களது பொறுப்பு. இப்படியே போனால் பல் தேய்க்கிற சவால் வந்தாலும் ஆச்சர்யமில்லை என அவர் கூறியுள்ளார்.