சினிமா

அட..கமலின் மகள் ஸ்ருதிஹாசனுக்கு இப்படியொரு சிக்கலா! என்ன இப்படி சொல்லிட்டாரே!! ஷாக்கான ரசிகர்கள்!!

Summary:

சினிமா துறையில் உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். சூர்யா நடிப்பில

சினிமா துறையில் உலக நாயகனாக வலம் வரும் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர் அதனைத் தொடர்ந்து பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமெடுத்து வரும் நிலையிலும் ஸ்ருதி இரு படங்களில் வேலை செய்துவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த ஸ்ருதி கூறுகையில், 
கொரோனா பிரச்சனை முடியும் வரை காத்திருக்க முடியாது. 

 இந்த மாதிரியான சூழலில் படப்பிடிப்பில் கலந்து கொள்வது கடினம்தான்.  மாஸ்க் இல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொள்வது பயமாகத்தான் இருக்கிறது. ஆனால் எனக்கும் மற்றவர்களைப் போல நிதி சிக்கல் இருக்கிறது. நான் ஒவ்வொரு கட்டணங்களையும் செலுத்த வேண்டியிருக்கிறது. எனக்கு யாரும் உதவி செய்வதில்லை அதற்காக நான் கண்டிப்பாக வேலைக்கு செல்லதான் வேண்டும் எனக் கூறியுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement