நடிகர் விஜய்யை தொடர்ந்து, மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற பிரபல நடிகை! அடுத்த சவால் யாருக்கெல்லாம் தெரியுமா?

நடிகர் விஜய்யை தொடர்ந்து, மகேஷ் பாபுவின் சவாலை ஏற்ற பிரபல நடிகை! அடுத்த சவால் யாருக்கெல்லாம் தெரியுமா?



shruthi-haasan-done-mahesh-babu-green-india-challenge

தெலுங்கு சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களை பெற்று  தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் மகேஷ் பாபு. அவர் சமீபத்தில் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அப்பொழுது மரக்கன்று நட்ட அவர், அதனை தொடர்ந்து #GreenIndiaChallenge என்ற சவாலை ஜூனியர் என்.டி.ஆர், விஜய், ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுத்துள்ளார். 

இந்த சவாலை ஏற்று கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் மரக்கன்றுகளை நட்டார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வந்தது. மேலும் ஏராளமான ரசிகர்கள் அவரை பின்பற்றி மரக்கன்றுகளையும்  நட்டனர்.

அதனைத் தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசனும், மகேஷ்பாபுவின் #GreenIndiaChallenge ஏற்று தற்போது மரக்கன்றுகளை நட்டுள்ளார். மேலும் அந்த சவாலை  ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், தெலுங்கு நடிகர் ராணா, நடிகை தமன்னா ஆகியோருக்கும் விடுத்துள்ளார். இந்நிலையில் ஸ்ருதிஹாசன் மரக்கன்று நட்ட  புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.