சினிமா

முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை வெளியிட்ட பாடகி ஸ்ரேயா கோஷல்! என்ன பெயர் வைத்துள்ளனர் பார்த்தீர்களா!!

Summary:

தமிழ், ஹிந்தி, மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளிலும் பல முன்னணி பிரபலங்களின் படங்களிலும் எக்

தமிழ், ஹிந்தி, மலையாளம்,தெலுங்கு என பல மொழிகளிலும் முன்னணி பிரபலங்களின் படங்களிலும் எக்கசக்க பாடல்களை பாடி தனது இனிமையான மெல்லிய குரலில் அனைவரது மனங்களையும் கட்டிப்போட்டவர் நடிகை ஸ்ரேயா கோஷல். இவரது பாடல்களுக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் ஸ்ரேயா கோஷல் கடந்த 2015-ம் ஆண்டு வங்காளத்தை சேர்ந்த தனது நீண்ட நாள் காதலரான ஷிலாதித்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஆறு வருடங்களுக்கு பிறகு தான் கர்ப்பமாக இருந்த மகிழ்ச்சியான செய்தியை அவர் ரசிகர்களிடம் தெரிவித்திருந்த நிலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில் ஸ்ரேயா கோஷல் தற்போது முதல் முறையாக தனது மகனின் புகைப்படத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர்கள் குழந்தைக்கு தேவ்யான் முகோபாத்யாயா என்று பெயர் வைத்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் வாழ்த்துக் கூறி, லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.


Advertisement--!>