"ராஷ்மிகாவை அவமானப்படுத்திய ஷ்ரத்தா கபூர்" வைரலாகும் வீடியோ!
கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட ராஷ்மிகா, தமிழில் சுல்தான், வாரிசு ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடித்த "புஷ்பா" படத்தில் இவரது ஸ்ரீவள்ளி கேரக்டர் மிகவும் பேசப்பட்டார்.
அதே போல், ஹிந்தி திரையுலகில் முன்னணியில் இருப்பவர் ஷ்ரத்தா கபூர். இவர் பிரபாஸுடன் நடித்த "சாஹோ" திரைப்படம் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் அறிமுகமாகியுள்ளார். இவர் மும்பையை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மும்பையில் நேற்று அம்பானி வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். தென்னிந்திய நட்சத்திரங்களான அட்லீ, நயன்தாரா, விக்னேஷ் சிவன், ராஷ்மிகா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் ராஷ்மிகா கலந்து கொண்டபோது, அவருக்கு எதிரே வந்த ஷ்ரத்தா கபூரைப் பார்த்து ராஷ்மிகா சிரித்துள்ளார். ஆனால் அவரை ஷ்ரத்தா கபூர் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.