அடஅட.. ஸ்ட்ரிக்டான கெட்டப்பிலும் செம ஹாட்டாதான் இருக்கீங்க.. ஷிவானி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!!
அடஅட.. ஸ்ட்ரிக்டான கெட்டப்பிலும் செம ஹாட்டாதான் இருக்கீங்க.. ஷிவானி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!!

விஜய் டிவியில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற தொடர்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரெட்டை ரோஜா என்ற தொடரில் நடித்து வந்தார். பின்னர் ஒரு சில காரணங்களால் அவர் பாதியிலேயே அந்த தொடரில் இருந்து விலகினார். பின் ஷிவானி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்4 இல் கலந்து கொண்டு மக்களிடம் மேலும் பிரபலமானார்.
நடிகை ஷிவானி, லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தின் மூலம் வெள்ளிதிரையில் அறிமுகமாகவுள்ளார். அதனை தொடர்ந்து அவர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார்.
மேலும் அதில் ஷிவானியும் போலீசாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஷிவானி போலீஸ் கெட்டப்பில் கெத்தாக இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் இந்த கெட்டப்பிலும் செம ஹாட்டாதான் இருக்கிங்க என கமெண்டு செய்து வருகின்றனர்.