சினிமா

வித்தியாசமான போஸில் ஷிவானி வெளியிட்ட வைட்டமின் D புகைப்படம்! குவியும் லைக்ஸ்கள்!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற தொடர் பகல் நிலவு. இந்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற தொடர் பகல் நிலவு. இந்த தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஷிவானி. அதனைத் தொடர்ந்து அவர் கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா உள்ளிட்ட சீரியல்களில் முக்கிய கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இரு சீரியல்களில் இருந்தும் ஒரு சில காரணங்களால் அவர் பாதியிலேயே விலகினார்.

மேலும் சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருக்கும் ஷிவானி தனது கவர்ச்சிப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். இந்த நிலையில் அவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இருக்குமிடம் தெரியாமல் அமைதியாக இருந்த அவர் சக போட்டியாளரான பாலாவுடன் காதல் சர்ச்சையில் சிக்கினார்.  பின்னர் FREEZE டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த ஷிவானியின் அம்மா அவரை கண்டித்ததை தொடர்ந்து அவர் முழுமூச்சுடன் டாஸ்க்கில் ஈடுபட்டு இறுதி வாரம் வரை சென்றார்.

இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஷிவானி மீண்டும் தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.  இந்த நிலையில் அவர் தற்போது வெயிலில் நின்றவாறு வித்தியாசமான போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு வைட்டமின் டி என்ற கேப்டன் கொடுத்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement