சினிமா

வாவ்.. குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பார்த்தீர்களா? சொன்னதை செஞ்சுட்டாரே நம்ம ஹீரோ!!

Summary:

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வ

விஜய் தொலைக்காட்சியில் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும் ஏராளமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன இவ்வாறு மக்களின் ஆதரவைப் பெற்று அனைவராலும் பெருமளவில் ரசிக்கப்பட்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி.  இதன் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்ற நிலையில் தற்போது குக் வித் கோமாளி 2 வது சீசன் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. 

 முதல் சீசனை விட 2வது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு காரணம் நிகழ்ச்சியில் கோமாளிகள் செய்யும் ரகளைகள்தான். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, சரத் ஆகியோர் கோமாளியாக உள்ளனர். இதில் ஷிவாங்கி செய்யும் கூத்துகள் வேற லெவல். 

இவர் பிரபல பின்னணி பாடகியான பின்னி கிருஷ்ணகுமாரின் மகளாவார்.மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் ஷிவாங்கி தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது.

 

கடந்த சில வாரத்திற்கு முன்பு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த சிவகார்த்திகேயன்  கோமாளிகளை பாராட்டியதோடு தனது படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் ஷிவாங்கிக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


Advertisement