சினிமா

பிரபல திரையரங்கில், ரசிகர்களுடன் ரசிகராக அஜித்தின் முக்கிய பிரபலம்.! வைரலாகும் வீடியோ!

Summary:

shali came to theatre to see the nkp

பாலிவுட்டில் அமிதாப்பச்சன், டாப்ஸி உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் பிங்க். இந்தப் படத்தை இயக்குனர் வினோத் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் அஜித் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரை எதிர்த்து வாதிடும் வழக்கறிஞராக ரங்கராஜ் பாண்டே நடித்துள்ளார். படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி  கொடுத்துள்ளார் வித்யாபாலன். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

nerkonda parvai க்கான பட முடிவு

இந்நிலையில் பெண் சுதந்திரம், பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சமூக கருத்துக்களை கூறும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட்8 உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. மேலும் இத்தகைய படங்களில் நடித்த மாஸ் ஹீரோ அஜித்திற்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளது. 

இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான சத்யம் தியேட்டரில் தல அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி ரசிகர்களுடன் படம் பார்க்க சென்றுள்ளார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.