ஹுரோ ஆவதற்கு முன்பு சீரியலில் நடித்துள்ள விஜய் சேதுபதி! எந்த சீரியலில் தெரியுமா? வைரலாகும் வீடியோ.

ஹுரோ ஆவதற்கு முன்பு சீரியலில் நடித்துள்ள விஜய் சேதுபதி! எந்த சீரியலில் தெரியுமா? வைரலாகும் வீடியோ.



sethupathi

தமிழ் சினிமாவில் தனது இடைவிடாத கடின உழைப்பால் உயர்ந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் விஜய் சேதுபதி. விஜய், அஜித்துக்கு அடுத்த இடத்தில் வந்துவிட்டார் விஜய் சேதுபதி.

இவரது நடிப்பில் வெளியாகும் அணைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறுகின்றது.மேலும் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான 96 திரைப்படம் நல்ல ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

vijay sethupathi

மேலும் விஜய் சேதுபதி "சைரா நரசிம்மா ரெட்டி" என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அதுமட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது இவர் விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது இவரை பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது விஜய் சேதுபதி அவர்கள் நடிக்கராக ஆவதற்கு முன்பு பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ஒளிபரப்பான பெண் என்ற சீரியலில் பரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது தற்போது இவர் இந்த சீரியலில் நடித்த பாடல் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதி சீரியலில் கூட நடித்துள்ளாரா என ஷாக்காகி வருகின்றனர்.