சினிமா

பிரபல நடிகர் பார்த்திபன் கொலை செய்ய முயற்சி! வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

Servant filed murder attempt case against to actor parthipan

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பார்த்திபன். நடிப்பையும் தாண்டி இவர் ஒரு சிறந்த இயக்குனர் மற்றும் மனிதர் என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக அவரது வீட்டில் வேலை செய்யும் நபர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் பார்த்திபனின் திருவான்மியூர் வீட்டில் நகைகள் கொள்ளை போனதாகவும், இதுகுறித்து போலீசார் பார்த்திபன் வீட்டில் வேலை செய்த அணைத்து பணியாளர்களையும் விசாரித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகரும், பாடலாசிரியருமான ஜெயம்கொண்டான் என்பவரை பார்த்திபன்  தாக்கி, மாடியில் இருந்து தள்ளி விட்டதாக ஜெயங்கொண்டான் தன்னுடைய புகார் மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கும், வீட்டில் காணப்போன நகைக்கும் தொடர்பு இருப்பதாக பார்த்திபன் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார் ஜெயம்கொண்டான்.

மேலும் நடிகர் பார்த்திபன் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்யவேண்டும் என்றும், அவரிடம் உடனே விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்றும் ஜெயம்கொண்டான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.


Advertisement