என்னது .. மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் இந்த பிரபல நடிகரின் பேரனா?? ஷாக்கான ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நந்தினி. அதனை தொடர்ந்து அவருக்கு கிடைத்த ஆதரவால் ஏராளமான தொடர்களிலும், வெள்ளிதிரையில் சில படங்களிலும் நடித்துள்ளார். நடிகை நந்தினி சீரியல் நடிகரான யோகேஸ்வரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் அழகிய காதல் ஜோடியான அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்கின்றனர். இந்த நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியின் அறிமுக வாரமாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் பாடகர்கள், குக் வித் கோமாளி பிரபலங்கள், சீரியல் நடிகர்கள் என பலரும் போட்டியாளர்களாக கலந்துகொண்டுள்ளனர்.
மாகாபா மற்றும் அர்ச்சனா தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் தேவதர்ஷினி மற்றும் கோபிநாத் நடுவர்களாக உள்ளனர். அப்போது பேசிய கோபிநாத் சிவாஜி படங்களிலும், ஏராளமான தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ள பழம்பெரும் நடிகரான ராமதாஸ்தான் யோகேஷின் தாத்தா என்று கூறியுள்ளார்.
அப்பொழுது பேசிய யோகேஷ், ஆரம்பத்தில் எனக்கு திரைத்துறைக்கு வரும் எண்ணமே இல்லை. ஆனால் எப்படியோ வந்துவிட்டேன். இப்பொழுது திரைத்துறையில் நான் வளரும் இந்த வேளையில் ஒரு உந்துகோலாக என் தாத்தா இல்லையே என்பது கவலையாக உள்ளது என எமோஷனலாக தெரிவித்திருந்தார்.