அடக்கொடுமையே! ரோஜா சீரியல் வில்லிக்கு இப்படியொரு பிரச்சனையா?? போலீசில் பரபரப்பு புகார்!!serial actress shamili complaint to police

தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு துவங்கி, இளைஞர் ஒருவர் மோசமான புகைப்படங்களை வெளியிட்டு அவதூறு பரப்பி வருவதாக பிரபல சின்னத்திரை நடிகை ஷாமிலி சுகுமார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சிகளில் ஏராளமான தொடர்களில் எத்தகைய கதாபாத்திரம் கொடுத்தாலும் அனைவரும் வியக்குமளவிற்கு தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருபவர் நடிகை ஷாமிலி. தென்றல் என்ற சீரியல் மூலம் அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து பல தொடர்களில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் ரோஜா தொடரில் அனு என்ற கதாபாத்திரத்தில் கொடூர வில்லியாக நடித்து வருகிறார். 

shamili

மேலும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். மேலும் யூடியூபில் ஆக்டிவாக இருக்கும் அவர் லைப் ஸ்டைல் தொடர்பான ஏராளமான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை ஷாமிலி சுகுமார் பெயரில் போலியான கணக்கு ஒன்று இன்ஸ்டாகிராமில் தொடங்கப்பட்டுள்ளது.

அதில் ஷாமிலி குறித்தும், அவரது குடும்பத்தினர் குறித்தும் அவதூறான கருத்துகள் பகிரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஷாமிலி இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து சென்னை சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.