அடேங்கப்பா! சீரியல் நடிகை பிரியாவிற்கு இவ்வளவு பெரிய மகளா?? நம்பவே முடியலையே.! செம ஷாக்கில் ரசிகர்கள்!!serial actress priya daughter photo viral

பிரபல தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சீரியல்களில் நடிகையாக களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர்கள் ஏராளம். அவ்வாறு செய்தி வாசிப்பாளராகவும், நிகழ்ச்சி மற்றும் விழாக்களை தொகுத்து வழங்கி வந்தவர் பிரியா. இவர் தனது தமிழ் உச்சரிப்பால் பார்வையாளர்களை பெருமளவில் ஈர்த்தவர்.

அதனை தொடர்ந்து சீரியலில் நடிகையாக களம் இறங்கிய அவர் பல தொலைக்காட்சி தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை பிரியா விஜய்   தொலைக்காட்சியில் தமிழ் கடவுள் முருகன் சீரியலில் பார்வதி கதாபாத்திரத்தில் நடித்து பெருமளவில் பிரபலமானார். பின்னர் அவர் மாப்பிள்ளை, பொன்மகள் வந்தாள், கண்மணி என தொடர்ந்து பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும் வெள்ளித்திரையில் ரஜினியின் 2 0 மற்றும் சூர்யாவின் பசங்க 2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

ப்ரியா தனது சிறுவயதிலேயே பிரின்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் கடந்த ஆண்டு ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது 32 வயது நிறைந்த ப்ரியா சமீபத்தில் தனது மகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இவருக்கு இவ்வளவு பெரிய மகளா என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.