
serial actress marriage issue
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி. அத்தொடரில் அவர் நடித்த துளசி என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அவருக்கென பெரும் ரசிகர்கள் உருவாக்கினர்.அதை தொடர்ந்து அவர் பல தொடர்களில் நடிக்க நடிக்க துவங்கினார்.
ஸ்ருதி தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வரும் அழகு என்ற சீரியலில் வருகிறார். தனது குடும்பத்திற்காக போராடி வரும் சுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவர் பல தமிழ் மக்களின் நெஞ்சங்களில் குடிகொண்டார்.
சீரியல் நடிகை அனைவருக்கும் திருமணமாகி வரும் நிலையில், நடிகை ஸ்ருதிக்கு 40 வயதாகியும் இன்னும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.இதனால் ரசிங்கர்கள் பெரும் குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இதுகுறித்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் கேட்டபோது, எனக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால் சில காரணங்களால் திருமணம் நடைபெறவில்லை.இதனால் நான் மிகவும் மன வேதனை அடைந்தேன் அதனால் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை.
அதன் பிறகு தற்பொழுது தான் நான் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து உள்ளேன். இனி பெற்றோர்கள் பார்த்து கொள்வார்கள் என கூறியுள்ளார். அதனால் அவருக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்
Advertisement
Advertisement