சினிமா

என்னது! ராசாத்தி சீரியல்நடிகை கீர்த்தியின் கணவர் இந்த நடிகரா! ஷாக்கான ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படங்கள்!

Summary:

serial actress keerthi with husband photo viral

பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராசாத்தி. இதில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விசித்ராவின் மகளான கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கீர்த்தி. 

இவர் சன் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா மற்றும் கல்யாண பரிசு போன்ற பல  தொடர்களில் வில்லியாக நடித்து வருகிறார். மேலும் இந்த தொடர் மட்டுமின்றி இதற்கு முன்பும் அவர் பல தொடர்களில் வில்லியாக நடித்துள்ளார்.

 இவரது கணவர் ஜெய்தனுஷ். இவர் சன் தொலைக்காட்சியில் பிற்பகலில் ஒளிபரப்பாகி வரும் சந்திரலேகா என்ற தொடரில் சஞ்சய் என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்கள் இருவரும் தமிழ் மட்டுமின்றி ஏராளமான மலையாள தொடர்களிலும் நடித்துள்ளனர். இந்நிலையில் இருவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைக் கண்ட நெட்டிசன்கள் அழகிய ஜோடி என புகழ்ந்து வருகின்றனர். 


Advertisement