வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
விஜய் டிவி நடிகைக்கு பிரம்மாண்டமாக நடந்து முடிந்த திருமணம்.! மாப்பிள்ளை இவர்தான்! வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!!
சன் தொலைக்காட்சியில் சுமார் 1000 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடிய நெடுந்தொடர் சந்திரலேகா. இத்தொடரில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஹர்ஷலா. இவர் பிருங்கதா பென்னேரி,
நானு மாட்டு நானு, சுக்கி, வரஸ்தாரா, ரோபோ ஃபேமிலி, சஞ்சு மாட்டு மற்றும் காவேரி போன்ற ஏராளமான கன்னட சீரியல்களில் நடித்துள்ளார்.
ஹர்ஷலா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.
தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து நடிகை ஹர்ஷலா, எனது கணவரை அறிமுகப்படுத்துகிறேன் என தெரிவித்துள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.