சினிமா

அப்பவே இப்படியா... ஓகே.. ஓகே..இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை பிரபல சீரியல் நடிகை! வைரல் புகைப்படம்...

Summary:

சீரியல் நடிகை ஆலியா மானசாவின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சீரியல் நடிகை ஆலியா மானசாவின் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இதில் செண்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ஆலியா மானசா. அதுமட்டும் இல்லாமல், அந்த தொடரின் நாயகன் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

இந்நிலையில் ராஜா ராணி தொடர் முடிவடைத்துள்ளதால், தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் அதன் 2 பாகத்தில் நடிகர் சித்துக்கு ஜோடியாக  ஆலியா, சந்தியா என்ற கதாபாத்திரத்தில் ஐபிஎஸ் அதிகாரி கேரக்டரில் நடித்து வருகிறார். மேலும் இத்தொடர் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், அவரது அழகிய குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களிடயே லைக்சை பெற்று வருகிறது.


Advertisement