எதமா பாக்குறது... எல்லாமே அவ்வளோ அழகு... கியூட்னஸ் ஓவர்லோடட் உள்ள ஆலியா ஐலா புகைப்படம்!serial-actor-alya-manasa-baby-cute-photo-9faef4

ஆலியா ஐலாவின் குயூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இத்தொடரின் மூலம் இவர்களுக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளாமே உருவாகினர்.

சீரியலில் கணவன் மனைவியாக நடித்தன் மூலம் காதல் வசப்பட்டு நிஜவாழ்விலும் கணவன் மனைவியாக ஆகினர். திருமண வாழ்வை சந்தோசமாக வாழ்த்த அவர்களுக்கு ஒரு அழகான பெண்குழந்தை உள்ளது. அக்குழந்தைக்கு "ஐலா சையத்" என  பெயர்வைத்துள்ளன.

இந்நிலையில் விஜய் டிவி யில் ஆலியா ராஜாராணி 2 சீரியலிலும், சஞ்சீவ் காற்றின் மொழி சீரியலிலும் நடித்து வருகின்றனர். மேலும் சீரியலில் ஒரு பக்கம் பிஸியாக இருந்தாலும் சமூகவலைதளங்களில் ஆக்ட்டிவ் ஆக உள்ளனர். சமீபத்தில் நடத்திய போட்டோஷூட்டில்  ஆலியா, மகள் ஐலாவை மடியில் தூக்கிவைத்து அழகான பூவினால் ஆன தோரணையில் அமர்ந்து இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்...